‘தமிழேன்டா’..!
ஐரோப்பிய மைக்ரோஸாஃப்டுக்கு தலைமைப் பதவிக்கு ஆள் சேர்க்க விரும்பினார் பில் கேட்ஸ்.
கிட்டத்தட்ட் 5000 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் குவிந்தன. அதில் நம்ம ‘தமிழேன்டா’வும் ஒரு ஆள்.
ஆரம்பகட்ட பரிசீலனையில் 2000 பேர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
நேரடித் தேர்வில் மீதமுள்ள 3000 பேர் குழுமியிருந்த இடத்திற்கு வந்த பில்கேட்ஸ், “ஜாவா தெரியாதவங்க எல்லாம் தேவையில்லை. வூட்டுக்கு கெளம்புங்க” என்றார். பாதிப்பேர் காலி.
நம்ம ‘தமிழேன்டா’வுக்கும் ஜாவா என்றால் என்னவென்றே தெரியாது. ‘அதனால என்ன.. என்னதான் ஆவுதுன்னு பார்ப்போமே’ என்று அப்படியே உட்காந்திருந்தார் நம்மாளு!
”குறைந்தபட்சம் 500 பேரை வைத்து வேலை வாங்கிய அனுபவமில்லாத ஆட்கள் எல்லாம் கெளம்புங்கப்பா” என்றார் பில்கேட்ஸ். ஆயிரம் பேர் காலி!
”ஹும்.. 5 பேரை வெச்சுக்கூட வேலை வாங்கினதில்லை... இருந்தாலும் என்ன தான் ஆகுதுன்னு பார்ப்போமே” என்று உட்கார்ந்திருந்தார் ‘தமிழேன்டா’!
மீதி 500 பேர்!
”செர்பிய-க்ரோவோஷிய மொழி தெரியாதவங்க ஓடிப் போயிடுங்க” என்றார் பில் கேட்ஸ்.
“தமிழே தகராறு.. இருந்தாலும் பார்ப்போம்” என்று ஆடாமல் அசையாமல் நம்மாளு!
498 பேர் காலி!
கடேசியாக 2 பேர் நம்மாளையும் சேர்த்து.
”ஆஹா.. கடைசியாக 2 பேர் தான். எனக்கு அந்த செர்பிய-க்ரோவோஷிய மொழி தெரியாது. அதனால் நீங்கள் 2 பேரும் பேசிக்கொள்ளுங்கள் பார்ப்போம்” என்றார் பில்கேட்ஸ்.
அப்படியே திரும்பி அடுத்த ஆளைப் பார்த்த நம்மாளு, “எந்தூரு?” என்றார்.
“தூக்கணாம்பட்டிங்க!” பதில் வந்தது!
- ஈமெயிலில் வந்தது! மொழியாக்கம் : ’தமிழேன்டா”